Enable Javscript for better performance
பட்டாசுகளை அனுமதிக்கப்பட்ட அறைகளில் மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும்: ஆட்சியர்- Dinamani

சுடச்சுட

    

    பட்டாசுகளை அனுமதிக்கப்பட்ட அறைகளில் மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும்: ஆட்சியர்

    By விருதுநகர்  |   Published on : 15th April 2016 08:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பட்டாசுகளை அனுமதிக்கப்பட்ட அறைகளில் விதிமுறைகளை பின்பற்றி தயாரிக்க வேண்டும் என பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வே. ராஜாராமன் தெரிவித்தார்.

      விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பாதுகாப்பான வெடிபொருள் விதிமுறைகளை பின்பற்றி பட்டாசு உற்பத்தி செய்வது தொடர்பாக பாட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்களுடனான ஆலோசனைக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

     இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வே.ராஜாராமன் தலைமை வகித்துப் பேசியதாவது: பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்கள் பாதுகாப்பான முறையில், உரிமம் பெற்ற வெடிபொருள்களை மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும். 

       அவ்வாறு உற்பத்தி செய்யப்பட்ட வெடிபொருள்களை பாதுகாப்பாக அனுமதிக்கப்பட்ட அளவு மட்டுமே சேமித்து வைக்க வேண்டும்.

     அனுமதிக்கப்பட்ட அறைகளில் விதிமுறைகளை பின்பற்றி தொழிலாளர்கள் பணியாற்ற உரிமையாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வெடிபொருள் தொழிற்சாலையில் உள்ள இடிதாங்கியை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும் என்றார் அவர்.

      இந்த கூட்டத்தில் வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலர் விவேக்குமார், துணை தலைமை வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலர் சுந்தரேசன், துணை வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலர்கள் சரவணன், போர்கர் மற்றும் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai