Enable Javscript for better performance
மனைவியை மீட்கக் கோரி கணவர் புகார்- Dinamani

சுடச்சுட

    

    காதலித்து திருமணம் செய்த மனைவியை, அவரது பெற்றோரிடம் இருந்து மீட்கக் கோரி விருதுநகர் காவல் நிலையத்தில் கணவர் புகார் அளித்துள்ளார்.

     விருதுநகர் பாண்டியன் நகரைச் சேர்ந்த மோகன்தாஸ் மகன் ஜான்சுந்தர் (23). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் போது, அப்பகுதியைச் சேர்ந்த துரைச்சாமி மகள் ரம்யா தேவியை காதலித்து திருமணம் செய்து கொண்டாராம். இந்நிலையில், விருதுநகர் பாண்டியன் நகர் காவல்நிலையத்தில் ஜான்சுந்தர் ஒரு புகார் அளித்தார். அதில், தனது மனைவி ரம்யாதேவி கர்ப்பிணியாக உள்ளார். அவரது பெற்றோர் அவரை கடந்த மார்ச் 23 இல் கோவைக்கு அழைத்துச் சென்றிருந்தனர். சிலநாள்களில் மீண்டும் அனுப்பிவிடுவதாகக் கூறிய அவர்கள் அவ்வாறு அனுப்பவில்லை. மேலும் மனைவியை தொலைபேசி மூலமும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

      கோவையில் உள்ள வீட்டிற்குச் சென்று பார்த்த போது அங்கு யாரும் இல்லை என்பது தெரிந்தது. எனவே மனைவி ரம்யாதேவியை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக போலீஸார்  வழக்குப் பதிவு செய்து  விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai