Enable Javscript for better performance
மாணவர்கள் நலன்களுக்கு பல்வேறு பணிகள்- Dinamani

சுடச்சுட

    

    இத்தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் பள்ளி மாணவர்கள் நலன் கருதி சுகாதாரவளாகம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது. கிராமங்களில் சுகாதார வளாகங்கள், தார்ச்சாலை, சிமெண்ட் சாலை வசதி, ராஜபாளையம்-அய்யனார்கோவில் சாலை உள்பட பல்வேறு பகுதிகளில் ரூ. 75லட்சத்திலும், நகரங்களில் ரூ.66.35 லட்சத்திலும் தார்ச்சாலை போடப்பட்டுள்ளது. வாடகை கட்டடத்தில் இயங்கி வந்த நியாய விலைக் கடைகளுக்கு சொந்த கட்டடப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனை, பொது மருத்துவமனையில் ரூ.99.45 லட்சத்தில் பல்வேறு வசதிகள் செய்துதரப்பட்டுள்ளது. மக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர்ப் பிரசனைக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு பகுதிகளில் மின்மோட்டார் வசதியுடன் குடிநீர்த் தொட்டி அமைக்கப்பட்டுள்ளதாக தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் கே. கோபால்சாமி தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai