Enable Javscript for better performance
வாய்ப்பிருந்தும் வளர்ச்சியடையாத \\\"பால்கோவா\\\' தொகுதி- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அழகாபுரி விலக்கு அருகே 229 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு அரசின் அனுமதிக்காக அனுப்பப்பட்டது. அதன்பிறகு பணிகள் நடைபெறவில்லை.

    இந்த தொகுதியில் படித்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் வேலை தேடி சிவகாசி, ராஜபாளையம் பகுதிகளுக்குச்  செல்லும் நிலை காலம் காலமாக இருந்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு அரசு ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் தொழில் பூங்கா அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு உள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையில் தேனி மாவட்டத்தின் வருஷநாடு பகுதிக்குச் செல்ல வத்திராயிருப்பு அருகே காமராஜபுரத்தில் இருந்து மலைப் பாதை வழியாகச் செல்ல முடியும். இதில் சுமார் 3.6 கி.மீ. தூரத்திற்கான பகுதி மத்திய வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. பிறபகுதிகள் தமிழக அரசு வசம் உள்ளது. அரசிடம் உள்ள பகுதியில் சாலை அமைக்கப்பட்டுவிட்டது. வனத்துறை பகுதியில் மட்டும் சாலை அமைக்க முடியவில்லை.

    அந்தச் சாலையையும் அமைத்தால் வத்திராயிருப்பு பகுதி பெரும் முன்னேற்றம் அடையும். வத்திராயிருப்பை தனி வட்டமாக்கினால் அப்பகுதி மேலும் வளர்ச்சிபெறும்.

    மாவட்டத்தில் பின்தங்கியிருந்த பல தொகுதிகள் மேம்பாடு அடைந்துள்ளன. ஆனால் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியைப் பொருத்தவரை வாய்ப்பிருந்தும் வளர்ச்சியில்லாத தொகுதியாக இருக்கிறது என்ற வருத்தம் அனைவரிடமும் உள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai