Enable Javscript for better performance
அருப்புக்கோட்டையில் போலி மருத்துவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    அருப்புக்கோட்டையில் போலி மருத்துவரை செவ்வாய்க்கிழமை மாலை போலீஸார் கைது செய்தனர்.
       அருப்புக்கோட்டை வட்டாரப் பகுதிகளில் மாவட்ட மருத்துவத்துறை துணை இயக்குநர் முத்துவீரலட்சுமி தலைமையிலான அதிகாரிகள் குழு செவ்வயாக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். இதில், பழைய பேருந்து நிலையத்திலிருந்து விருதுநகர் நோக்கிச் செல்லும் சாலையில் உள்ள ஒரு திரையரங்கு எதிரே உள்ள ஒரு கட்டடத்தில் மருத்துவம் பார்த்து வந்த புரோஸ்கான் (70) என்பவரது சான்தறிதழ்களை அதிகாரிகள் சரிபார்த்தனர். அப்போது அவர் ஹோமியோபதி படித்ததாகக் கூறினாராம். ஆனால் ஹோமியோபதி படித்ததற்கான முறையான சான்றிதழ்கள் இல்லாததால் அவர் மீது அதிகாரிகள் காவல்துறையில் புகார் அளித்தனர். அதன்பேரில் அருப்புக்கோட்டை நகர் காவல்துறையினர் வழக்குப் பதிந்து புரோஸ்கானைக் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai