Enable Javscript for better performance
அருப்புக்கோட்டை பள்ளி மாணவர்கள் மாநில போட்டிக்குத் தகுதி- Dinamani

சுடச்சுட

    

    அருப்புக்கோட்டை பள்ளி மாணவர்கள் மாநில போட்டிக்குத் தகுதி

    By DIN  |   Published on : 28th November 2016 08:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அருப்புக்கோட்டை எஸ்.பி.கே.பள்ளி மாணவர்கள் மண்டல அளவிலான ஸ்குவாஷ் போட்டியில் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
    அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. பள்ளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 7 கல்வி மாவட்டங்களை உள்ளடக்கிய ராமநாதபுரம் மண்டல அளவிலான ஸ்குவாஷ் போட்டி விருதுநகர் மாவட்ட உள் அரங்கில் நடைபெற்றது. இதில் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே.பள்ளி மாணவர்கள் 19 வயதுக்குள்பட்டோருக்கான ஒற்றையர் பிரிவி முதலிடமும், 17 வயதுக்குள்பட்டோருக்கான ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் முதலிடங்களையும் பிடித்துள்ளனர்.
    இதன் மூலம் அடுத்து அவர்கள் சென்னையில் நடைபெறவுள்ள மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
    இந்த மாணவர்களையும் அவர்களுக்கு பயிற்சியளித்த ஆசிரியர்களையும் பள்ளிக் கல்விக்குழுத் தலைவர் எம்.சுதாகர், செயலர் என்.வி.காசிமுருகன், தலைமை ஆசிரியர் ஆனந்தராஜன் உள்ளிட்டோர் பாராட்டினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai