Enable Javscript for better performance
கற்றல் அடைவுத் திறன் கலந்துரையாடல்- Dinamani

சுடச்சுட

    

    அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், சனிக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வளமையத்திற்குட்பட்ட இந்திராநகர், நரையன்குளம் ஒத்தப்பட்டி மற்றும் சிவந்திபட்டி குறுவள மையங்களில் ஆசிரியர்களுக்கு குழந்தைகளின் கற்றல் அடைவு குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.
    மாவட்ட ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதுநிலை விரிவுரையாளர் ஜி.வெள்ளத்துரை, பேராசிரியர் எஸ்.மணிவண்ணன் ஆகியோர் மையங்களில் நடைபெற்ற பயிற்சியை ஆய்வு செய்தனர்.
    பயிற்சியின் கருத்தாளர்களாக ஆசிரியப் பயிற்றுநர்கள் த.கணேஷ்வரி, கனகலட்சுமி செயல்பட்டனர். பயிற்சியில் 460 தொடக்க நிலை ஆசிரியர்களும், 150 உயர்தொடக்க நிலை ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் கி.சீனிவாசன் மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் எஸ்.மாடசாமி செய்திருந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai