Enable Javscript for better performance
காங்கிரஸ் பிரமுகருக்குக் கொலை மிரட்டல்: 2 பேர் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    காங்கிரஸ் பிரமுகருக்குக் கொலை மிரட்டல்: 2 பேர் மீது வழக்கு

    By DIN  |   Published on : 28th November 2016 08:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காங்கிரஸ் கட்சியின் அருப்புக்கோட்டை முன்னாள் நகர் தலைவர் சுப்பிரமணியம்(70). இவர் மலையரசன் கோயில் தெருவில் தனியார் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக விசைத்தறித் தொழில் செய்து வருகிறார்.
    இந்நிலையில் பாளையம்பட்டி தபால் குடியிருப்பைச் சேர்ந்த பெருமாள் மகன் அழகர்(42), அழகரின் நண்பர் கலுசுவலிங்கம் ஆகியோர் சுப்பிரமணியத்தின் விசைத்தறிக் கூடத்திற்கு சென்ற சனிக்கிழமை வந்து அந்த இடத்தைத் தாங்கள் விலைக்கு வாங்கி விட்டதாகக் கூறி உடனடியாக  காலி செய்ய வேண்டுமெனவும் மீறினால் கொலை செய்வோம் எனவும் மிரட்டல் விடுத்தனராம். இச்சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவிலும் பதிவாகியிருந்தது. அந்த ஒளிப்பதிவு ஆதாரத்துடன் சுப்பிரமணியம் அருப்புக்கோட்டை நகர் காவல்நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகார் அளித்தார். இதையடுத்து அழகர்(42),  கலுசுவலிங்கம்(46) ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai