Enable Javscript for better performance
"குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்'- Dinamani

சுடச்சுட

    

    "குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்'

    By DIN  |   Published on : 28th November 2016 08:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வடகிழக்கு பருவழை சராசரி அளவை விட குறைவாக உள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாவட்ட கண்காணிப்பு அலுவலர் எஸ். கிருஷ்ணன் சனிக்கிழமை அறிவுறுத்தினார்.
    விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம்  முன்னிலையில் அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் அரசு முத ன்மை செயலாளர் மற்றும் விருதுநகர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் எஸ். கிருஷ்ணன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
    இக்கூட்டத்தில்  அவர் பேசியது: வடகிழக்கு பருவழை சராசரி அளவை விட குறைவாக உள்ளது. இதனால் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாடினை போக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பருவமழை வீணாகாத வகையில் கண்மாய்கள், ஓடைகள், வரத்துக்கால்வாய்களை தூய்மைப்படுத்த வேண்டும்.
    மாவட்டத்தில் 228 குடியிருப்பு பகுதிகளில் ஆழ்துளைக்கிணறுகள் புதிதாக அமைப்பதற்கும், குடிநீர் தட்டுப்பாடு இன்றி கிடைப்பதற்கும் திட்ட அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
    அருப்புக்கோட்டை நகராட்சி பகுதியில் வைகை குடிநீர் திட்டத்தின் மூலம் ஒரு சில இடங்களில் குடிநீர் கிடைப்பதில் கால தாமதம் ஏற்படுகிறது. எனவே, அங்கு குடிநீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நீர் ஆதாரங்களை பயன் படுத்தி ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
    பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகளை அதிக அளவில் சேர்ப்பதற்கு எளிமையான வழிமுறை களை ஏற்படுத்த அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்வடிப்பகுதி மற்றும் வரத்துக்கால்வாய் பகுதிகளில் உள்ள கருவேலம் செடிகளை அகற்றுவதற்காக திட்டம் தயார்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் அவர்.
    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சி. முத்துக்குமரன், ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குனர் சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பூமி உட்பட பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai