Enable Javscript for better performance
பிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு இரங்கல்- Dinamani

சுடச்சுட

    

    பிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு ராஜபாளையத்தில் அனைத்துக்கட்சியின் சார்பில் இரங்கல் ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.
    இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.எம்.ராமசாமி தலைமை வகித்தார். சட்டப் பேரவை உறுப்பினர் எஸ்.தங்கப்பாண்டியன், மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலர் கே.அர்ச்சுனன், சிபிஐ நகரச் செயலர் வி.ரவி, சிபிஎம் நகரச் செயலர் பி.மாரியப்பன், தி.மு.க நகரச் செயலர் பி.ராமமூர்த்தி, திராவிடர் கழக மாநில இளைஞர்அணி செயலாளர் இல.திருப்பதி, பார்வர்ட் பிளாக் கே.சுப்புராஜ், ம.தி.மு.க சார்பில் சேது.இன்பமணி, த.மா.கா சார்பில் டைகர் சம்சுதீன், காங்கிரஸ் சார்பில் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    பின்னர் பிடல் காஸ்ட்ரோ படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai