Enable Javscript for better performance
விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் விபத்து அபாயம்- Dinamani

சுடச்சுட

    

    விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் மேம்பால தூண் அமைக்க தோண்டப்பட்ட 15 அடி ஆழ குழியைச் சுற்றி பாதுகாப்பு இல்லாததால் பொதுமக்கள் விபத்தில் சிக்கி கொள்ளும் நிலையுள்ளது.
    விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிக்காக ரயில்வே கடவு கடந்த மார்ச் 19 இல் மூடப் பட்டது. ரயில்வே கடவின் இருபுறமும் தூண்கள் அமைப்பதற்காக சுமார் 15 அடி அழத்தில் பெரிய பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. ஆனால், அங்கு எச்சரிக்கை பலகையோ, பள்ளத்தை சுற்றி பாதுகாப்பு தடுப்புகளோ வைக்கப்பட வில்லை. ராமமூர்த்தி சாலையில் நகராட்சிப் பள்ளி, திரையரங்கம், தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஏராளமான குடியிருப்புக்கள் உள்ளன.
     இதன் காரணமாக இப்பகுதியில் இரவு பகலாக  பொது மக்கள் நடமாட்டம் மற்றும் இரு சக்கர வாகன போக்குவரத்து இருக்கும். தோண்டப்பட்ட பள்ளத்தை சுற்றி பாதுகாப்பு தடுப்புகள் இல்லாததால் அவ்வழியே வரும் பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் விபத்தில் சிக்கி கொள்ளும் நிலையுள்ளது. எனவே, அப்பகுதியில் தடுப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai