Enable Javscript for better performance
100 சதவீத மானியத்தில் சொட்டுநீர் பாசன கருவிகள் மாவட்ட தோட்டக்கலை துறை அலுவலர் தகவல்- Dinamani

சுடச்சுட

    

    100 சதவீத மானியத்தில் சொட்டுநீர் பாசன கருவிகள் மாவட்ட தோட்டக்கலை துறை அலுவலர் தகவல்

    By DIN  |   Published on : 28th November 2016 12:58 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    drop

     

    நுண்ணீர் பாசனத் திட்டத்தில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத் திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் சொட்டு நீர்ப் பாசனக் கருவிகள் மற்றும் மழைத் தூவான் கருவிகள் வழங்கப்படுவதாக தோட்டக்கலை துறை துணை இயக்குனர் தமிழ்வேந்தன் தெரிவித்தார்.
     அவர் மேலும் கூறியதாவது: விருதுநகர் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை மூலம், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
    வேளாண் வளர்ச்சித் திட்டம், உயர் தொழில் நுட்ப உற்பத்தி திட்டத்தின் மூலம், விவசாயிகளுக்கு அதிக மகசூல் கொடுக்கக்கூடிய ஒட்டு மாங் கன்றுகள், வீரிய ஒட்டு பப்பாளிக் கன்றுகள், கொய்யா பதியன்கள், எலுமிச்சை கன்றுகள், மல்லிகை கன்றுகள், வீரிய ஒட்டு வெண்டை, கத்திரி, தக்காளி மற்றும் மிளகாய் விதைகள் வழங்கப்படுகிறது.
    ஒரு விவசாயிக்கு அதிக பட்சம் 2 ஹெக்டேர் பரப்பு வரை காய்கறி விதைகளும், 4 ஹெக்டேர் பரப்பு வரை பழக்கன்றுகளும் வழங்கப்படுகிறது.
     வெங்காய சாகுபடி பரப்பை அதிகரிக்கும் பொருட்டு 156 ஹெக்டேர் பரப்பிற்கு ரூ.31.20 லட்சத்தில் சிறிய வெங்காய விதைகள் 40 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. 40 சதவீத மானியத்தில் தேனீ வளர்ப்பு பெட்டி வழங்கப்படுகிறது.  
     நுண்ணீர் பாசனத் திட்டத்தின் மூலம் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் சொட்டுநீர்ப் பாசனக் கருவிகள் மற்றும் மழைத்தூவான் கருவிகள் வழங்கப்படுகிறது.
    இதனைப் பயன்படுத்தி குறைந்த நீரில் அதிக பரப்பு சாகுபடி செய்யலாம், களைகள் கட்டுப்படுத்தப்படுகிறது. கூலிச்செலவுவும் குறைகிறது.
    2016-17 ஆம் ஆண்டு நுண்ணீர் பாசனம் திட்டம் தோட்டக்கலைப்பயிர்களுக்கு 146.50 ஹெக்டேர் பரப்பில் ரூ.100.87 லட்சத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    எனவே, விருதுநகர் மாவட்ட விவசாயிகள் தோட்டக்கலை திட்டங்களை செயல்படுத்தி பயன்பெற குடும்ப அட்டை நகல், புகைப்படம்,  கிராம அலுவலர் வழங்கிய அடங்கல், நிலத்தின் வரைபடம் போன்ற ஆவணங்களுடன் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி முன் பதிவு செய்து பயன் பெறலாம் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai