Enable Javscript for better performance
அருப்புக்கோட்டையில் ஆசிரியை உள்பட 2 பெண்களிடம்17 பவுன் நகைகள் பறிப்பு- Dinamani

சுடச்சுட

    

    அருப்புக்கோட்டையில் ஆசிரியை உள்பட 2 பெண்களிடம் 17 பவுன் நகைகள் பறிப்பு

    By DIN  |   Published on : 08th October 2016 12:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அருப்புக்கோட்டை நகரின் இரு வேறு இடங்களில் ஆசிரியை உள்பட இரு பெண்களிடம் 17 பவுன் நகைகளை வெள்ளிக்கிழமை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
    அருப்புக்கோட்டை இந்திரா நகர் பகுதியில் குடியிருப்பவர் பூர்ண லட்சுமி (48). ஜோகில்பட்டி பள்ளியில்
    ஆசிரியையாகப் பணிபுரிகிறார். வெள்ளிக்கிழமை மாலை பணி முடிந்து பேருந்தில் வந்த இவர், இந்திரா நகரில் இறங்கி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது அவரைப் பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த இரு நபர்கள் பூர்ணலட்சுமியின் கழுத்திலிருந்த 7 பவுன் தங்க நகைகளைப் பறித்துக்கொண்டு தப்பிச்சென்று விட்டனராம்.
    இச்சம்பவம் நடந்த இடத்திலிருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது அஜீஸ் நகர். இந்த பகுதியில் வசிப்பவரான ராஜேஸ்வரி (32), சொந்த வேலையாக வெளியில் சென்று வெள்ளிக்கிழமை மாலை மீண்டும் தனது வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தாராம். அப்போது அவரைப்பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் ராஜேஸ்வரியின் கழுத்திலிருந்த 10 பவுன் தங்க நகைகளைப் பறித்துக்கொண்டு தப்பிச்சென்று விட்டனராம்.
    இந்த இருவேறு நகைபறிப்பு நிகழ்வுகளும் அடுத்தடுத்துள்ள இரு நகர் பகுதிகளில் சிறிது நேர இடைவெளியில் நடந்திருப்பதால், ஒரே கும்பலே இவ்வழிப்பறிச் செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இவ்விரு சம்பவங்கள் தொடர்பாக நகர் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின் றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai