Enable Javscript for better performance
இயலா குழந்தைகளுக்கு கற்பிக்க பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    அருப்புக்கோட்டையில் இயலா குழந்தைகளுக்கான கற்பித்தல் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
    இடைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ் பட்டதாரித் தமிழ் ஆசிரியர்களுக்கு இப்பயிற்சி அளிக்கப்பட்டது. ஸ்ரீசெளடாம்பிகா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற 5 நாள்கள் பயிற்சி வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.
    நிறைவு நாள் பயிற்சியை கல்லூரி முதல்வர் சிவக்குமார் முன்னிலை வகித்துத் தொடக்கி வைத்தார். அருப்புக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் சங்கர நாராயணன் பயிற்சியின் முக்கியத்துவம் குறித்துப் பேசினார். விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி மற்றும் உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி ஆகியோர் பயிற்சியி வகுப்பை பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினர். அருப்புக்கோட்டை கல்வி மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் 140 பட்டதாரித் தமிழ் ஆசிரியர்கள் இப்பயிற்சியில் பங்கேற்றனர்.
    இயலாக் குழந்தைகளைப் பிற மாணவர்களுடன் இணைத்துக் கற்பிக்கும் முறைகள், இயலாக் குழந்தைகளுக்கான அரசின் நலத் திட்டங்கள், இயலாக் குழந்தைகளுக்கான வள மையம் குறித்தும் , பெண் பாலின பாகுபாடு குறித்து இயலாக் குழந்தைகளுக்கு விளக்குதல் குறித்தும் இப்பயிற்சியில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai