Enable Javscript for better performance
சாத்தூரில் திறக்கப்படாத 15 கழிப்பறைகள்: பயன்பாட்டுக்கு வருமா?- Dinamani

சுடச்சுட

    

    சாத்தூரில் திறக்கப்படாத 15 கழிப்பறைகள்: பயன்பாட்டுக்கு வருமா?

    By DIN  |   Published on : 08th October 2016 12:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாத்தூர் நகராட்சி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ள 15 கழிப்பறைகளை திறக்கவும், திறந்த கழிப்பறைகளை முறையாக பராமரிக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சாத்தூர் நகாரட்சியில் வெள்ளைகரை சாலை, பிரதான சாலை, பேருந்து நிலையம், வடக்குகு ரதவீதி, அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் 25 -க்கு மேற்பட்ட பொதுகழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
    நகராட்சி சார்பில் திறந்தவெளி மலம் கழிப்பதை தடுக்கும் திட்டம், நம்ம கழிப்பறை திட்டம், பொதுசுகாதார கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் அடிப்படையிலும், சட்டப்பேரவை உறுப்பினர் நிதியிலிருந்தும் இந்த கழிப்பறைகள் கட்டபட்டுள்ளன.
    இதில் 10 கழிப்பறைகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. இந்த கழிப்பறைகளிலும் நகராட்சி நிர்வாகத்தில் இருக்கும் இலவச கழிப்பறைகளும், கட்டண கழிப்பறைகளும் முறையாக பராமரிக்கபடுவதில்லை. இதனால் கழிப்பறைகளை சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்தி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் 15-க்கு மேற்பட்ட கழிப்பறைகள் நகராட்சி நிர்வாகத்தால் கட்டபட்டு, குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. குத்தகைக்கு எடுத்துள்ளவர்கள் கழிப்பறைகளை திறக்காததால், புதிதாக கட்டபட்டுள்ள கழிப்பறைகள் காட்சி பொருளாகவே உள்ளன.
    தெருக்களில் உள்ள கழிப்பறைகளை திறக்காவிட்டாலும், பிரதான சாலை மற்றும் பேருந்து நிலையம் உள்ளிட்ட பொதுஇடங்களில் உள்ள கழிப்பறைகளையாவது பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் திறக்க அதிகாரிகளும், நகாராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும் என்று சாத்தூர் நகர் பகுதி பொதுமக்களும்,சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
    இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ஒரு சில கழிப்பறைகள் செயல்பட்டு வருகின்றன.
    பூட்டபட்டுள்ள கழிப்பறைகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் வசம் உள்ளன. இதனால் அவை திறக்கபடவில்லை. விரைவில் அவற்றை திறக்க நடவடிக்கை எடுக்கபடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai