Enable Javscript for better performance
சிம்கார்டு வாங்கிய வழக்கு: ஸ்ரீவிலி. நீதிமன்றத்தில் 2 மாவோயிஸ்டுகள் ஆஜர்: மேலும் 45 நாள்கள் காவல் நீ- Dinamani

சுடச்சுட

    

    சிம்கார்டு வாங்கிய வழக்கு: ஸ்ரீவிலி. நீதிமன்றத்தில் 2 மாவோயிஸ்டுகள் ஆஜர்: மேலும் 45 நாள்கள் காவல் நீட்டிப்பு

    By DIN  |   Published on : 08th October 2016 12:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிவகாசியில் மோசடியாக சிம் கார்டுகள் வாங்கிய வழக்கில் 2 மாவோயிஸ்டுகளின் நீதிமன்றக் காவலை மேலும் 45 நாட்களுக்கு நீட்டித்து விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
    கேரள மாநிலம், திருச்சூரில் வளப்பாடு என்ற இடத்தைச் சேர்ந்த ருபேஸ் மனைவி சைனா (எ) சைனி (எ) சோபா (எ) ராஜீ (42). கேரள மாநிலம் குழிபரம்பில் என்ற இடத்தைச் சேர்ந்த ஜார்ஜ் மகன் அனூப் மேத்யூ ஜார்ஜ் (32). மாவோயிஸ்டுகள் என இந்த இருவரும் கைது செய்யப்பட்டு கோயமுத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் கணேஷ் என்பவரின் குடும்ப அட்டை, கையொப்பம், மற்றும் புகைப்படத்தைப் பயன்படுத்தி மேற்கண்ட இருவரும் சிம்கார்டு வாங்கி பயன்படுத்தியது தெரியவந்தது.
    இதையடுத்து கணேஷ் அளித்த புகாரின் பேரில் மாவோயிஸ்டுகள் இருவரும் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தனர்.இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மாவோயிஸ்டுகள் இருவரின் நீதிமன்ற காவலை நீட்டிக்க திருச்சி கோட்டை சரக காவல் உதவி ஆணையாளர் கோரி மனு தாக்கல் செய்தார்.
    அதில் இருவர் மீதும் குற்ற இறுதி அறிக்கை தாக்கல் செய்ய இதர ஆவணங்கள் பெற வேண்டியுள்ளதால் காவல் நீட்டிப்பு பெற வேண்டியுள்ளது என தெரிவித்திருந்தார். மனுவை முதன்மை அமர்வு நீதிபதி ரா.தாரணி விசாரித்து, மாவோயிஸ்டுகள் இருவருக்கும் மேலும் 45 நாள்கள் நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டார். மாவோயிஸ்டுகள் வருகையையொட்டி நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாவோயிஸ்டு ஆதரவு கோஷங்களை இவர்கள் எழுப்பியதால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai