Enable Javscript for better performance
"சிறு சிறு வெற்றிகளே வாழ்க்கைப் பாதையை உருவாக்குகின்றன'- Dinamani

சுடச்சுட

    

    "சிறு சிறு வெற்றிகளே வாழ்க்கைப் பாதையை உருவாக்குகின்றன'

    By DIN  |   Published on : 08th October 2016 12:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மனிதனுக்கு கிடைக்கும் சிறு சிறு வெற்றிகளே வாழ்க்கை பாதையை உருவாக்கின்றன என சென்னை ராமகிருஷ்ண மடத்தின் சுவாமி பரமசுகானந்தாஜி கூறினார்.
    சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் வியாழக்கிழமை முன்னேறத்திற்கான திறவு கோல் என்ற தலைப்பில் சுவாமி பேசியது: ஒரு பெரிய மலையைப் பார்த்து பலர் ஏற இயலாது என ஒதுங்கிவிடுகிறார்கள். பலர் முயற்சி செய்யலாம் என நினைப்பார்கள். சிலர் அதில் ஏற இயலும் என நினைத்து அதனை செயல்படுத்துவார்கள். எனவே நம் திறமையைப் பற்றி நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். லட்சியத்தை நோக்கிச் செல்லும் போது, சிறு சிறு விஷயங்களை எடுத்துக்கொண்டு அதில் வெற்றி பெற வேண்டும். சிறு சிறு வெற்றிகளே வாழ்க்கை பாதையை உருவாக்குகின்றன. அந்த வெற்றிகளே நம்மை மீண்டும் செயல்பட வைக்கிறது. அதுவே லட்சியத்தை நோக்கி நம்மை கொண்டு செல்கின்றன.
    வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களது சரித்திரத்தைப் படிக்க வேண்டும். புதிய புத்தகங்கள் புதிய விஷங்களை தெரிந்து கொள்ளும் மனோபாவம் வேண்டும். லட்சியமும், அதில் உள்ள ஈடுபாடும் தான் ஓருவரது உயர்வுக்கு வழி வகுக்கிறது. தோல்வி இல்லாத வாழ்க்கை இல்லை. அதனை நல்ல அனுபவமாக எடுத்துக்கொண்டு, அடுத்த கட்டத்திற்கு செல்ல முயற்சிக்க வேண்டும். வெற்றி பெற்றவர்கள் தோல்வியை ஒரு சவாலாக எடுத்துக்கொள்வார்கள். மாணவர்களாகிய நீங்கள் உங்கள் வெற்றிக்கான பாதையை சரியாக அமைத்து செயல்பட்டு வெற்றி பெறுங்கள் என்றார்.
    நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் வ.பாண்டியராஜன் தலைமை வகித்தார். முன்னதாக ஒருங்கிணைப்பாளர் நளினி வரவேற்றார். முடிவில் பேராசிரியர் ஆர்.செல்வக்குமார் நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai