Enable Javscript for better performance
பத்தாம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு சிறப்புவகுப்பு- Dinamani

சுடச்சுட

    

    பத்தாம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு சிறப்புவகுப்பு

    By DIN  |   Published on : 08th October 2016 12:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளில் குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களுக்கு சிறப்பு ஆசிரியர்கள் மூலம் சிறப்பு வகுப்புகள் நடைபெற உள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி தெரிவித்தார்.
    அவர் மேலும் கூறியது: விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை, விருதுநகர் கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் 100 சதவீத தேர்ச்சி பெற காலை, மாலை வேளைகளில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புக்கள் நடைபெற்று வருகிறது. மேலும், ஒவ்வொரு மாதமும் சிறப்பு தேர்வுகள் நடத்தி மாணவர்களின் கல்வித் திறன் ஆய்வு செய்யப்படுகிறது.
    இந்நிலையில், பல்வேறு பாடங்களில் 15 -க்கு குறைவாக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகள் பற்றிய பட்டியல் அனைத்து பள்ளிகளிலும் பெறப்பட்டுள்ளது. இந்த மாணவர்களை பொதுத் தேர்வில் முழுமையாக தேர்ச்சி அடையச் செய்வதற்காக ஒவ்வொரு பாடத்திற்கும் தலா 5 சிறப்பு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், நவ., 21 முதல் 30 வரை கல்வி மாவட்டம் வாரியாக விருதுநகர், அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறப்பு வகுப்புகள் நடத்த உள்ளனர். இதில், மாணவ, மாணவிகள் எதை படித்தால் எளிதில் தேர்ச்சி பெறலாம் என்பது குறித்து
    விளக்கமளிக்க உள்ளனர். இதன் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் நிகழாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் அனைத்து மாணவ, மாணவிகளும் முழு அளவில் தேர்ச்சி பெற வாய்ப்புள்ளது என்றார் அவர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai