Enable Javscript for better performance
பல்கலைக் கழகங்கள் இடையிலான இறகுப்பந்துப் போட்டி: கர்நாடக ஜெய்ன் பல்கலை. அணி சாம்பியன்- Dinamani

சுடச்சுட

    

    பல்கலைக் கழகங்கள் இடையிலான இறகுப்பந்துப் போட்டி: கர்நாடக ஜெய்ன் பல்கலை. அணி சாம்பியன்

    By DIN  |   Published on : 08th October 2016 12:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிவகாசியில் நடைபெற்ற தென்னிந்திய பல்கலைகழங்களுக்கு இடையிலான இறகுபந்துப் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் கர்நாடக மாநில ஜெய்ன் பல்கலைக் கழக அணி வெற்றி பெற்றது.
    மதுரை காமராஜர் பல்கலைகழகம் சார்பில் கடந்த 3 ஆம் தேதி தொடங்கிய போட்டியில், தமிழகம், ஆந்திரம்,தெலுங்கானா, கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஆண்கள் அணி 69, பெண்கள் அணி 57 பங்கேற்றன. நாக்அவுட் முறையில் போட்டிகள் நடைபெற்றன.
    ஆண்கள் பிரிவு போட்டிகள் அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி உள்விளையாட்டு அரங்கிலும், பெண்கள் பிரிவு போட்டிகள் சிவகாசி எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரி உள்விளையாட்டு அரங்கிலும் நடைபெற்றன.
    வெள்ளிக்கிழமை நடைபெற்ற இறுதிப்போட்டியில் பெண்கள் பிரிவில் கர்நாடக ஜெய்ன் பல்கலைக்கழக அணி, ஆந்திர பல்கலைக்கழக அணியை 2-0 என்ற செட் கணக்கில் வென்றது.
    ஆண்கள் பிரிவில் ஜெய்ன் பல்கலைக் கழக அணி, ஆந்திரா பல்கலைக்கழக அணியை 3-0 என்ற செட் கணக்கில் வென்றது.
    இப்போட்டியில் பெண்கள் பிரிவில் தெலுங்கானா உஸ்மானியா பல்கலைகழகம் மூன்றாமிடமும், தெலுங்கானா ஜவஹர்லால் பல்கலைகழகம் நான்காமிடமும் பெற்றன. ஆண்கள் பிரிவில் தமிழகத்தின் பாரதியார் பல்கலைகழகம் மூன்றாமிடமும், கர்நாடக மணிப்பால் பல்கலைகழகம் நான்காமிடமும் பெற்றன.
    முதல் நான்கு இடங்களைப் பிடித்த அணிகள் ஹரியானா மாநிலத்தில் நடைபெற உள்ள அகில இந்திய பல்கலைகங்களுக்கிடைலான இறகுப்பந்துப் போட்டியில் கலந்து கொள்ளும் என அறிவிக்கப்பட்டது.
    பரிசளிப்பு விழாவிற்கு கல்லூரி ஆட்சிக்குழுத்தலைவர் அ.ராமமூர்த்தி தலைமை வகித்தார். மதுரை காமராஜர் பல்கலைகழக பதிவாளர்(பொறுப்பு) பி.விஜயன் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai