Enable Javscript for better performance
பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு- Dinamani

சுடச்சுட

    

    விருதுநகரில் வியாழக்கிழமை இரவு நடந்து சென்ற பெண்ணிடம் 3 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
    விருதுநகர் லட்சுமி நகரைச் சேர்ந்தவர் பார்த்திபன் மனைவி பரமேஸ்வரி (60). இவர் வெளியூரில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று விட்டு, வியாழக்கிழமை இரவு லட்சுமி நகர் பேருந்து நிறுத்தத்திலிருந்து தனது வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார்.
    அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர், பரமேஸ்வரி அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து விருதுநகர் பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் பரமேஸ்வரி அளித்த புகாரின் பேரில் போலீஸார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    சட்டவிரோதமாகமது பாட்டில்கள் விற்ற 2 பேர் கைது

    விருதுநகரில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை வெள்ளிக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
    விருதுநகர் அருகே உள்ள சென்னல்குடியைச் சேர்ந்தவர் சின்னதுரை (30), மாயன் (32) ஆகியோர், பழைய பேருந்து நிலையம் அருகே நள்ளிரவு நேரத்தில் அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்துள்ளனர்.
    அப்போது, அவ்வழியே வந்த போலீஸார், சந்தேகத்தின் பேரில் அவர்களை விசாரித்தபோது, அனுமதியின்றி 22 மது பாட்டில்கள் வைத்திருப்பது தெரிந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த மேற்கு போலீஸார், அவர்களிடமிருந்த மது பாட்டில்களை கைப்பற்றினர்.

    மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் சாவு
    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வியாழக்கிழமை மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.
    கிருஷ்ணன்கோவில்- திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் என்.லட்சுமியாபுரம் அருகே சாலை ஓரம் நடந்து சென்று கொண்டிருந்த அடையாளம் தெரியாத ஒருவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயமுற்ற அவர், மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து வடுகபட்டி கிராம நிர்வாக அலுவலர் எஸ்.கிருஷ்ணகுமார், அளித்த புகாரின்பேரில் நத்தம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.
    இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த புதுக்கோட்டை மாவட்டம், ராஜகோபாலபுரத்தைச் சேர்ந்த மேகநாதன் மகன் அபிஷேக் என்பவரைக் கைது செய்தனர். உயிரிழந்தவர் யார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai