Enable Javscript for better performance
கண்மாயில் வளர்ந்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    கண்மாயில் வளர்ந்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றக் கோரிக்கை

    By DIN  |   Published on : 15th October 2016 05:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அருப்புக்கோட்டை செவல்கண்மாயில் வளர்ந்துள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றுமாறு புளியம்பட்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
      அருப்புக்கோட்டையில் நகரை ஒட்டி செவல்கண்மாய் உள்ளது. இதில் நீர் தேங்கினால் அருகில் உள்ள புளியம்பட்டி, மணிநகரம், வீரலட்சுமி நகர், அன்பு நகர் பகுதிகளின் நிலத்தடி நீர் உயரும். வியாழக்கிழமை அருப்புக்கோட்டையில் பலத்த மழை பெய்தது. ஆனால், செவல்கண்மாயில் ஆகாயத்தாமரைகள் ஏராளமாக வளர்ந்துள்ளதால் தண்ணீர் தேங்கவில்லை.
     மேலும் வரும் தண்ணீரையும் இந்தச் செடிகள் உறிஞ்சிவிடக்கூடிய நிலை உள்ளது. எனவே இந்த ஆகாயத்தாமரைகளை அகற்றி நிலத்தடிநீர் ஆதாரத்தைப் பெருக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai