Enable Javscript for better performance
கபடிப் போட்டியில் சாத்தூர் கல்லூரி வெற்றி- Dinamani

சுடச்சுட

    

    ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் வெள்ளிக்கிழமை மதுரை காமராஜர் பல்கலைக்கழக டி பிரிவு கல்லூரிகளுக்கிடையேயான கபடி இறுதி போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளை கல்லூரி செயலாளர் ஏ.ஏ.எஸ்.ஷியாம் தலைமை வகித்து துவக்கிவைத்தார். கல்லூரித் தலைவர் சந்திரசேகரராஜா முன்னிலை வகித்தார். இறுதிப் போட்டியில் சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியும், சாத்தூர் மதுரை காமராஜர்  பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியும் மோதின.
    இதில் சாத்தூர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகக் கல்லூரி 51.15 பள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. போட்டிகளை மதுரை காமராஜர் பல்கலைக்கழக டி மண்டல ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன், ராஜூக்கல்கல்லூரி உடற்கல்வி இயக்குநர் முத்துக்குமார் நடத்தினர். வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai