Enable Javscript for better performance
சிவகாசியில் பயன்படுத்த முடியாத 200 லிட்டர் பால் அழிப்பு- Dinamani

சுடச்சுட

    

    சிவகாசியில் பயன்படுத்த முடியாத 200 லிட்டர் பால் அழிப்பு

    By DIN  |   Published on : 15th October 2016 05:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிவகாசியில் உபயோகப்படுத்த முடியாத நிலையில் இருந்த 200 லிட்டர் பாலை வெள்ளிக்கிழமை அதிகாரிகள் கீழே கொட்டி அழித்தனர்.
    விருதுநகர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டபிள்யூ. சாலோடிசன் தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் மாரிமுத்து(சிவகாசி), வெங்டேசன்(திருத்தங்கல்), நாராயணன் (சாத்தூர்), ராஜேந்திரன்(விருதுநகர்), சீனிவாசன்(வத்திராயிருப்பு) உள்ளிட்டோர் சிவகாசி பகுதியில் வேனில் கொண்டு செல்லப்பட்ட பாலை சோதனையிட்டனர்.
    சிவகாசி மணிநகர் பேருந்து நிறுத்தம் அருகே பால் கொண்டு சென்ற வேனை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் இருந்த 200 லிட்டர் பால் மக்கள் பயன்படித்த முடியாத நிலையில் இருந்தது. இதையடுத்து அந்தப் பாலை கீழே கொட்டி அழித்தனர். பால் மாதிரியை சேகரித்த அதிகாரிகள் அதனை சோதனைக்கு அனுப்ப உள்ளதாக தெரிவித்தனர்.
    முன்னதாக அவர்கள் சிவகாசி - விருதுநகர் புறவழிச்சாலையில் பெட்டிக்கடைகளில் வைத்திருந்த பான்பராக் மற்றும் புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai