Enable Javscript for better performance
சுவர் விழுந்து விவசாயி சாவு- Dinamani

சுடச்சுட

    

    காரியாபட்டி அருகே மழைக்கு வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் விவசாயி ஒருவர் வெள்ளிக் கிழமை உயிரிழந்தார்.
      காரியாபட்டி அருகே உள்ள எஸ். கல்லுபட்டியை சேர்ந்தவர் ஆண்டி(30). விவசாயியான இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். வியாழக்கிழமை இரவு எஸ். கல்லுபட்டி பகுதியில் பலத்த மழை பெய்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை வீட்டு ஜன்னல் காங்கிரீட் மீது தேங்கியிருந்த தண்ணீரை ஆண்டி அகற்றியுள்ளார். அப்போது ஜன்னல் இருந்த சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதில், சிக்கிய ஆண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து காரியாபட்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai