Enable Javscript for better performance
பெண் கொலை: 3 தனிப்படைகள் அமைப்பு- Dinamani

சுடச்சுட

    

    விருதுநகர் வருமானவரித் துறை அலுவலர் மனைவி கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
       விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மாடர்ன் நகரில் வசித்து வருபவர் ராமையா. இவரது மனைவி குருவம்மாள்(55). இவர்களது மூன்று குழந்தைகள் திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகின்றனர். மதுரை வருமானவரி அலுவலகத்தில் கண்காணிப்பாளராக ராமையா பணியாற்றுகிறார். தினமும் மதுரை சென்று வந்தார். இந்நிலையில் வியாழக்கிழமை வீட்டில் தனியாக இருந்த குருவம்மாளை மர்ம நபர்கள் கழுத்தை அறுத்து கொலை செய்து 8 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர்.
    வெள்ளிக்கிழமை டிஜஜி ஆனந்த்குமார் சோமானி கொலை நடந்த வீட்டை பார்வையிட்டார்.
      போலீஸ் தரப்பில் கூறியதாவது: குருவம்மாள் வீட்டிற்கு அறிமுகமானவர்கள் தான் பகலில் சென்றுள்ளனர்.
       அதனால், அவர்களது உறவினர்கள் யாரெனும் இக்கொலை சம்பவத்தில் ஈடு பட்டுள்ளனரா என அனைவரது செல்லிடப்பேசி எண்களையும் ஆய்வு செய்து வருகி றோம். மேலும் கொலையாளிகளை கண்டுபிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai