Enable Javscript for better performance
விருதுநகர் மாவட்டத்தில் பரவலாக மழை- Dinamani

சுடச்சுட

    

    விருதுநகர் மாவட்டத்தில் அதிகபட்சமாக சாத்தூரில் 122 மி.மீ மழை வியாழக்கிழமை பெய்துள்ளது.
     விருதுநகர் மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை மாலை முதல் இரவு வரை பரவலாக பலத்தமழை பெய்தது. இதனால் வெப்பம் குறைந்து குளிர்ச்சி ஏற்பட்டதால் பொதுமக்கள் மட்டுமன்றி விவசாயிகளும் சந்தோஷமடைந்தனர்.
       வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் விருதுநகர் மாவட்டத்தில் பதிவான மழை விவரம் (மி.மீ): அருப்புக்கோட்டை:51, சாத்தூர்:122, ஸ்ரீவில்லிபுத்தூர்: 55, சிவகாசி:78.20, விருதுநகர்:31, திருச்சுழி:8, இராஜபாளையம்:15, காரியாபட்டி:46.20, வத்திராயிருப்பு:58.60, பிளவக்கல்:14.60, வெம்பக்கோட்டை:82.20, கோவிலாங்குளம்:82.80 மழை பெய்துள்ளது.
        மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை 644.60 மி.மீ மழை பெய்த நிலையில் சராசரியாக 53.72 மி.மீ மழை பதிவாகி உள்ளது. பெரியார், வெம்பக்கோட்டை, ஆனைக்குட்டம், குல்லூர் சந்தை, இருக்கன்குடி, அணைகளுக்கு நீர் வரத்து தொடங்கியுள் ளது. ஆனால், கோவிலார், கோல்வார்பட்டி, சாஸ்தாகோயில் அணைகளுக்கு நீர் வரத்து இல்லை. வெள்ளிக்கிழமை மாலை முதல் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் இந்த அணைகளுக்கும் நீர் வரக்கூடிய சூழல் உள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai