விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் சிவகாசி - சாட்சியாபுரத்தில் உள்ள செங்குளம் கண்மாய் தூர்வாரும் பணியை திருச்சுழி சட்டப்பேரவை உறுப்பினர் தங்கம் தென்னரசு புதன்கிழமை தொடங்கிவைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில், தமிழகத்தில் பல நீர்நிலைகளை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சிவகாசி செங்குளம் கண்மாய் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது.இந்த கண்மாயில் பல ஆண்டுகளாக கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதை அகற்றி சுத்தம் செய்து, கரையை பலப்படுத்தும் பணி நடைபெற உள்ளது.
இந்தப் பணி மேலும் ஒரு வாரத்துக்கு நடைபெறும். விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் இதுவரை 5 கண்மாய்கள் தூர்வாரப்பட்டுள்ளன என்றார்.
மாநில வர்த்தக அணி துணைச் செயலர் டி. வனராஜா, சிவகாசி தெற்கு ஒன்றிய செயலர் வி. விவேகன்ராஜா, பொதுக்குழு உறுப்பினர் பால்ராஜ், நகரச் செயலர் முனியாண்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.