விருதுநகர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் குருசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலர் ராமசுப்புராஜ் முன்னிலை வகித்தார்.
மாநில பொதுச்செயலர் மாயமலை கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில், சமூக பாதுகாப்புத் திட்டத்தில் வழங்கப்படும் சிறப்பு ஓய்வூதியத்தை மாற்ற வேண்டும். தமிழ்நாடு பென்ஷன் சட்டவரையறைக்குள் கொண்டு வந்து, குறைந்தபட்ச பென்ஷன் வழங்க வேண்டும். தொகுப்பூதிய ஒப்பந்த கூலி அடிப்படையில் பணிபுரிந்த காலத்தை சட்டபூர்வ பென்ஷனுக்கு எடுத்து கொள்வதுபோல், எங்களது பணி காலத்தையும் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலர் கண்ணன், தலைவர் முனியசாமி மற்றும் ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.