ராஜபாளையத்தில் சமையல் செய்தபோது ஆடையில் தீப்பற்றியதில் காயமடைந்த பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
ராஜபாளையம் லெட்சுமியாபுரம் தெருவைச் சேர்ந்தவர் காளீஸ்வரன் (36). இவரது மனைவி முக்தீஸ்வரி (30). இவர்களுக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர்.
இந்நிலையில், சம்பவதன்று முக்தீஸ்வரி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது அவரது சேலையில் தீப்பற்றியது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் தீவிர சிகிச்சைக்காக சிவகாசியில் உள்ள தீக்காய சிறப்பு பிரிவிற்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முக்தீஸ்வரி செவ்வாய்க்கிழமை இறந்தார். இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.