சிவகாசி அருகே புதன்கிழமை பசியால் மயங்கி விழுந்த முதியவர் உயிரிழந்தார்.
சிவகாசி அருகேயுள்ள செங்கமலநாட்சியார்புரத்தைச் சேர்ந்தவர் புஷ்பராஜ் என்ற கணேசன் (60). இவர் அய்யம்பட்டி கோயில் விழாவுக்கு சென்றிருந்தார். அங்கு பசியால் மயங்கி விழுந்தாராம். இதையடுத்து சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் மாரனேரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.