ராஜபாளையம் பகுதியில் மதுபாட்டில்கள், புகையிலை விற்பனை செய்த 10 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன் உத்தரவின்பேரிலும், ராஜபாளையம் டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் ஆலோசனையின் பேரிலும் சட்டவிரோத மது, போதைப் பொருள்கள் விற்பனையை தடுக்க போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதன்படி ராஜபாளையம் பகுதியில் போலீஸார் ரோந்துப் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சட்டவிரோதமாக மீனாட்சி திரையரங்கம் பகுதியில் மதுபானம் விற்றதாக ஹரிராமச்சந்திரன், மலையடிப்பட்டி ரயில்வே கேட் அருகே மதுவிற்ற கணேஷ்குமார் ஆகியோரை போலீஸார் கைது செய்து 12 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதுபோல எஸ். ராமலிங்கபுரத்தில் மது விற்ற ராமராஜ், காளவாசல் ஊருணியில் மதுவிற்ற ரவி, ராம்கோ நகரில் மதுவிற்ற கருத்தப்பாண்டியன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து 21 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் முறம்பு வண்டி மாகாளியம்மன் பகுதியில் மதுவிற்ற பால்பாண்டி என்பவரை கைது செய்து 34 மதுபாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் சந்தைமார்க் கெட்டில் பெட்டிக்கடை நடத்தி வரும் பாலமுருகன் புகையிலை விற்றதாக கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 40 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. வேட்டைபெருமாள் கோவிலில் அழகர்சாமி என்பவரின் பெட்டிக்கடையிலும, முடங்கியார் ரோட்டில் முத்துசாமி என்பவரின் பெட்டிக்கடையிலும் புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்களும் கைது செய்யப்பட்டனர்.
சேத்தூர் தளவாய்புரம் ரோட்டில் பெட்டிக் கடையில் புகையிலை விற்ற பாக்கியராஜ் என்பவரையும் போலீஸார் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.