விருதுநகரில், ரத்த தானத்தை வலியுறுத்தி, செவிலியர் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியில் விருதுநகர் அரசு செவிலியர் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.
விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணி தேசபந்து மைதானம், பஜார் வழியாக சென்றது. அப்போது, ஒரு மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் ரத்தம் உள்ளது. அதில், இருந்து வெறும் 300 முதல் 350 மில்லிலீட்டர் (ஒரு யூனிட்) ரத்தம் மட்டுமே தானத்தின்போது பெறப்படும். அவ்வாறு கொடுத்த ரத்தத்தின் அளவு இரண்டே வாரங்களில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும் உற்பத்தியாகிவிடும். 3 மாதங்களுக்கு ஒரு முறை எந்தவித பாதிப்பும் இன்றி ரத்த தானம் செய்யலாம் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.