அரசு பொதுத் தேர்வு முடிவு குறித்து மாணவர்கள் அச்சப்பட கூடாது: ஆட்சியர்

அரசுப் பொதுத் தேர்வு குறித்த அச்சத்தைப் போக்க மாணவர்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானம் தெரிவித்துள்ளார்.
Updated on
1 min read

அரசுப் பொதுத் தேர்வு குறித்த அச்சத்தைப் போக்க மாணவர்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானம் தெரிவித்துள்ளார்.
 இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: விருதுநகர் மாவட்டத்தில் பணி புரியும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஏற்கெனவே உளவியல் சார்ந்த பயிர்சி அளிக்கப்பட்டுள்ளது. அதில், தேர்வெழுதும் மாணவர்கள் தற்கொலை எண்ணத்திலிருந்து விடுபட என்ன வழி என்பது குறித்தும் விளக்கப்பட்டது. இப்பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலம் மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு முன்பு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் பொதுத் தேர்வு முடிவுகளால் மாணவ, மாணவிகளுக்கு  ஏற்படும் பயம், மன உளச்சல் மற்றும் தற்கொலை எண்ணங்களை தவிர்க்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, பொதுத் தேர்வில் தோல்வி மற்றும் மதிப்பெண்கள் குறைவின் காரணமாக மனப் பதற்றத்துடன் இருக்கும் மாணவ, மாணவிகளிடம்
பெற்றோர்கள் மன உளைச்சல் தரும்படியாக பேச கூடாது. மேலும், அவர்களின் அன்றாட நடவடிக்கைகளில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் மற்றும் தற்கொலை பற்றிய பேச்சுக்கள் இவற்றை கண்டறிந்தால் உடனே தகுந்த ஆலோசனைகளை பெற விருதுநகர் சூலக்கரைமேடு பகுதியில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, தமிழக அரசின் சார்பில் கல்வி மற்றும் மனநல ஆலோசனை வழங்கும் 104 இலவச மருத்துவ ஆலோசனை சேவை மையம் ஆகியவற்றைத் தொடர்பு கொள்ளலாம்.
கூடுதல் விபரங்களுக்கு விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தொலைபேசி: 98407 28216 அல்லது 04562 - 252826 மற்றும் சிநேகா ஆலோசனை மைய இலவச சேவை தொலைபேசி எண். 044 - 24640050 மற்றும் சைல்டு லைன் இலவச தொலைபேசி எண். 1098 முதலானவற்றில் தொடர்பு கொள்ளலாம். மனவள ஆலோசனை பெறுவோர்களின் விபரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com