சிவகாசி வட்டம் எம்.புதுப்பட்டியில் காவலர் குடியிருப்பு கட்டுமானப் பணிகள் பல மாதங்களாகியும் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது.
எம்.புதுப்பட்டியில் தமிழநாடு காவலர் வீட்டு வசதி வாரியம் திருநெல்வேலி கோட்டம் சார்பில் ரூ 1.57 கோடி மதிப்பீட்டில் காவலர் குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. ஒரு உதவி ஆய்வாளர், 11 காவலர்கள் குடியிருப்பு என இரு பிளாக்குகளாக கட்டப்பட்டுள்ளது. இங்கு வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகையில் கட்டுமானப் பணி 28.11.15 தொடங்கப்பட்டதாகவும், 27.9.2016-இல் முடிவடைந்துவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. எனினும் இதுவரை இக்குடியிருப்பு திறக்கப்படவில்லை.
இது குறித்து ஒரு காவலர் கூறியதாவது:
குடியிருப்பில், நான்கு பக்க சுற்றுசுவரில் முன்பக்கம் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கம் காவல்நிலையச்சுவர் உள்ளதால் மேலும் இருபக்கம் சுற்றுச்சுவர் கட்டப்பட வேண்டும். அந்த சுவர்களின் கட்டுமானப் பணியும் நிறைவு பெற்றதும் கட்டடம் பயன்பாட்டிற்கு வரும் எனத் தெரிகிறது என்றார்.
சுற்றுச்சுவர் பணிகளை விரைந்து முடித்து குடியிருப்பை திறக்க வேண்டும் என காவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.