சுடச்சுட

    

    மணப்பாறை அருகே விபத்தில் அருப்புக்கோட்டை இளைஞர் சாவு

    By DIN  |   Published on : 02nd January 2017 08:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே சனிக்கிழமை இரவு நேரிட்ட விபத்தில் அருப்புக்கோட்டையச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்தார்.
    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே வெல்லக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் மதன்ராஜ் மகன் ஆனஸ்ட்ராஜ் (21). இவர் சென்னையில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்து வந்தார்.
     இவர், புத்தாண்டு விடுமுறையையொட்டி தனது நண்பர்களுடன் சென்னையிலிருந்து அருப்புக்கோட்டைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். கார் துவரங்குறிச்சி அருகே திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, காரை விட்டு கீழிறங்கிய ஆனஸ்ட்ராஜ் புத்தாண்டையொட்டி, சாலையின் மையத்தடுப்பில் பட்டாசு வெடித்துவிட்டு, சாலையைக் கடந்து காரை நோக்கி சென்றுள்ளார். அப்போது திருச்சியிலிருந்து மதுரை நோக்கி சென்ற கார், ஆனஸ்ட்ராஜ் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றதாம். இதில் பலத்த காயமடைந்த ஆனஸ்ட்ராஜை மீட்ட நண்பர்கள், துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஆனஸ்ட்ராஜ் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். துவரங்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai