சுடச்சுட

    

    ஸ்ரீவிலி. நகராட்சியில் டெங்கு தடுப்பு கலந்தாய்வு கூட்டம்

    By DIN  |   Published on : 02nd January 2017 08:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஸ்ரீவில்லிபுத்தூரில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 7 வயது சிறுமி உயிரிழந்த நிலையில், டெங்கு தடுப்பு கலந்தாய்வுக் கூட்டம் சனிக்கிழமை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
    இதில் சிவகாசி சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கலுசிவலிங்கம், நகராட்சி ஆணையாளர் முகமது மைதீன், மாவட்ட பூச்சியியல் வல்லுநர் சுப்பிரமணியம், இளநிலை பூச்சியியல் வல்லுநர் ராதாகிருஷ்ணன், துணை இயக்குநரின் நேர்முக உதவியாளர் சீனிவாசன், நகர்நல அலுவலர் டாக்டர் மா.சரோஜா உள்ளிட்டோர் பணிகள் குறித்து விளக்கினர். காய்ச்சல் கண்டால், பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் சுகாதாரப் பணிகள் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டுள்ளதாயும், பொதுமக்கள் எந்தவித அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் அலுவலர்கள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai