சுடச்சுட

  

  "கலர் மத்தாப்புகளையும், கேப் வெடிகளையும் தனித்தனியாக வைத்தே அனுப்ப வேண்டும்'

  By DIN  |   Published on : 03rd January 2017 01:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கலர் மத்தாப்பு பெட்டிகளில் உரசும் பகுதி இருப்பதால், அதையும், கேப் வெடிகளையும் தனித்தனியாக வைத்தே  விற்பனைக்கு அனுப்ப வேண்டும் என துணை முதன்மை வெடிபொருள்கட்டுப்பாட்டு அதிகாரி கி. சுந்தரேசன் கூறினார்.
  விருதுநகர் மாவட்டத்தில் கலர் மத்தாப்பு தயாரிப்பில் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. சிவகாசி வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அலுவகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சுந்தரேசன் பேசியதாவது: சாதா தீப்பெட்டிகளைப் போல கலர் மத்தாப்பு தீப்பெட்டிகளை பேக்கிங் செய்யக்கூடாது. விற்பனையாளரின் தேவைக்கேற்ப 4,5,6 என கலர் மத்தாப்பு தீப்பெட்டிகளை, ஒரு பெட்டியில் வைத்து பேக்கிங் செய்ய வேண்டும்.
  நட்சத்திரம் போல ஒளி சிந்தும் மத்தாப்புக்கும், வண்ணத்தில் ஒளிசிந்தும் மத்தாப்புகளுக்கும் விதிகளின் படி தான் வேதியியல் பொருள்கள் இருக்க வேண்டும். பெட்டிகளில் என்னென்ன வேதியியல் பொருள்கள் உள்ளது என அச்சிடப்பட வேண்டும்.
  கலர் மத்தாப்புக்களில் பொட்டாசியம் குளோரேட் கலப்பதால் தயாரிப்பு, பேக்கிங் பணிகளை மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும். பட்டாசு கிப்ட் பாக்ஸிஸ் கலர் மத்தாப்பு தீப்பெட்டிகளை வைக்கக் கூடாது. கலர் மத்தாப்பு தீப்பெட்டிகளில் வெளிப்புறம், குச்சிகளை தேய்ப்பதற்கு மருந்துக்கலவை வைக்கப்பட்டுள்ளதால், பட்டாசு கிப்ட் பாக்ஸில் வைக்கும் போது உராய்வு ஏற்பட்டு விபத்து ஏற்படலாம். எனவே கலர் மத்தாப்பூ தீப்பெட்டிகளையும், கேப் வெடிகளையும் தனித்தனியாகத் தான் விற்பனை செய்ய வேண்டும். இது குறித்து நீங்கள் சில்லரை வியாபாரிகளிடம் எடுத்துக்கூற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
     இக்கூட்டத்தில் கலர் மத்தாப்பு தயாரிப்போர் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியம், நிர்வாகிகள் அதிபதி, ஆறுமுகச்சாமி, காளிராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai