சுடச்சுட

  

  மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே திங்கள்கிழமை வாகனம் மோதி பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
   விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த அச்சகத் தொழிலாளி கணேசன் (50). இவர் தனது நண்பர்கள் 4 பேருடன் சிவகாசியில் இருந்து பழனிக்கு பாதயாத்திரையாக சனிக்கிழமை புறப்பட்டார்.
   மதுரை மாவட்டம் திருமங்கலம் கரிசல்குளம் நான்கு வழிச்சாலை பாலம் அருகே திங்கள்கிழமை நண்பர்கள் முன்னால் சென்று விட்ட நிலையில் கணேசன் மட்டும் தனியாக நடந்து வந்துள்ளார். அப்போது அவ்வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
   இந்நிலையில், வெகுநேரமாகியும் கணேசன் வராததைக் கண்டு நண்பர்கள் திரும்பிச் சென்று பார்த்த போது அவர் விபத்தில் சிக்கி இறந்து கிடப்பது தெரிந்தது.
    இதுகுறித்து திருமங்கலம் நகர்ப் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai