சுடச்சுட

  

  விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு வாகன சோதனையில் ரூ.2.16 கோடி அபராதம் வசூல்

  By DIN  |   Published on : 03rd January 2017 01:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடந்த 2016-ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில், மோட்டார் வாகன சோதனைகளின் போது ரூ.2 கோடி அபராதத் தொகை வசூல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன் தெரிவித்தார்.
   அவர் கூறியதாவது: விருதுநகர் மாவட்டத்தில், குற்றச் சம்பவங்கள் நடைபெற்றால் உடனுக்குடன் தகவல் தெரிவிக்க ஹலோ போலீஸ் 9150011000  எண் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி 2016 ஆம் ஆண்டில் 3703 அழைப்புகள் மூலம் புகார்கள் பெறப்பட்டு 292 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில், 513 பேர் கைது செய்யப்பட்டனர். மற்ற புகார்களில் சுமுகத் தீர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  கடந்த 2014 இல் 47 கொலை வழக்குகளும், 2015 இல் 57 கொலை வழக்கும், 2016 இல் 42 கொலை வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
  மூன்றாண்டு சராசரியில் 26 சதவீதம் குற்றம் குறைந்துள்ளது. 2015 இல் 77 கொலை முயற்சி வழக்குகளும், 2016 இல் 61 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆதாய கொலை வழக்கில் 2015 இல் ஒன்று, 2016 இல் மூன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 2 வழக்குகளில் குற்றவாளிகள் உடனடியாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளனர்.
  கொள்ளை சம்பவங்களில் 2015 இல் 65 வழக்கு, 2016 இல் 77 வழக்கும் பதிவாகி உள்ளன. அதில் கடந்தாண்டு 73 வழக்குகளில் குற்றவாளிகள் பிடிக்கப்பட்டு 368 சவரன் நகைகள் மீட்கப்பட்டுள்ளன.
  சுவரில் துளையிட்டு திருடுவது 2015 இல் 130 ம், 2016 இல் 116 வழக்குகள் பதிவாகி உள்ளன. இது 16 சதவீதம் குறைவாகும். குற்ற வழக்குகளில் ரூபாய் ஒரு கோடியே 55 லட்சத்து 39 ஆயிரத்து 897  மதிப்பிலான சொத்துக்கள் கைப்பற்றப்பட்டன.
  தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ரவுடிகள் 34 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1194 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றனர்.
  2016 இல் வாகனத் தணிக்கையில் 1 லட்சத்து 53 ஆயிரத்து 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.2 கோடியே 16 லட்சத்து 51 ஆயிரத்து 145 அபராதத் தொகையாக வசூல் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai