சுடச்சுட

    

    அருப்புக்கோட்டையில் சுகாதார வளாகம் அமைக்கக் கோரிக்கை

    By DIN  |   Published on : 04th January 2017 06:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அருப்புக்கோட்டை கருவாடுபேட்டை பகுதியில் சுகாதார வளாகம் அமைக்க வேண்டும் என இப்பகுதி சிறுவணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    அருப்புக்கோட்டை நகரின் மையத்தில் பழைய கருவாடு பேட்டை பகுதியில் வணிக வளாகங்களும், அங்காடிகளும் உள்ளன. இப்பகுதி நான்குமுனைச் சாலையில் வெளியூர் சிறு வணிகர்கள் உள்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினமும் வந்துசெல்கின்றனர். இந்தப் பகுதியைச் சுற்றி எங்கும் தனியார் சுகாதார வளாகமோ, நகராட்சி கழிப்பறைகளோ கிடையாது. இதனால் அருகில் உள்ள கழிவுநீர் வாய்க்காலை ஆண்கள் சிறுநீர் கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இப்பகுதியை திறந்தவெளி சிறுநீர் கழிப்பிடமாகப் பயன்படுத்துவதால் துர்நாற்றமும் சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் சுகாதார வளாகம் அமைத்து பராமரிக்க நகராட்சி முன்வர வேண்டும் என சிறுவணிகர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai