சுடச்சுட

  

  "கிராம அடங்கல் கணக்குகளை விவசாயிகள் நாளை சரிபார்க்கலாம்'

  By DIN  |   Published on : 04th January 2017 06:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் தங்கள் சாகுபடி குறித்த விவரங்களை கிராம நிர்வாக அலுவலகத்தில் வியாழக்கிழமை நேரில் சென்று சரிபார்த்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானம் தெரிவித்துள்ளார்.
  அவர் மேலும் கூறியிருப்பதாவது: கிராம பதிவேடுகளில், நிலத்தின் சர்வே எண், பரப்பளவு, சாகுபடி செய்துள்ள பயிர் வகைகள் போன்ற விவரங்கள் சரியாக பதியப்பட்டுள்ளனவா என்பதை விவசாயிகள் நேரில் சென்று அறிந்து கொள்ள கிராம அடங்கல் கணக்கு அனைத்து கிராம நிர்வாக அலுவலகத்திலும் வியாழக்கிழமை பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. விவசாயிகள் தங்கள் பயிர்கள் குறித்த விவரங்கள் சரியாக உள்ளனவா என்பதை சரி பார்த்து கையெழுத்திட வேண்டும். ஆட்சேபம் இருக்குமானால் சம்மந்தப்பட்ட வட்டாட்சியரிடம் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai