சுடச்சுட

  

  சிவகாசி அருகே திங்கள்கிழமை சாலை விபத்தில் பட்டாசுத் தொழிலாளி உயிரிழந்தார்.
  சிவகாசி அருகே வி.சொக்கலிங்காபுரத்தைச் சேர்ந்த பொன்னுச்சாமி மகன் அழகேஸ்வரன் (33). பட்டாசுத் தொழிலாளியான இவர், திங்கள்கிழமை தனது மொபெட்டில் ஆலமரத்துப்பட்டி-செல்லையநாயக்கன்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, இவர் எதிர்பாராதவிதமாக ஒரு திருப்பத்தில் மொபெட்டிலிருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
  இது குறித்த புகாரின்பேரில் சிவகாசி கிழக்குப் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai