சுடச்சுட

  

  திருத்தங்கலில் திங்கள்கிழமை பட்டாசு ஆலை ஜீப் மோதி மின்கம்பம் சாய்ந்ததில், அப்பகுதியில் 4 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.
   திருத்தங்கல் கே.கே. நகரைச் சேர்ந்த கண்ணன் மகன் நாகேந்திரன் (29). இவர், தனியார் பட்டாசு ஆலை ஜீப் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். அதே பட்டாசு ஆலையில் இவரது தாய் லட்சுமி (57) தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், திங்கள்கிழமை மாலை வேலைமுடிந்ததும் பட்டாசு ஆலைத் தொழிலாளிகளை இறக்கிவிட்டு, ஜீப்பில் அவர்கள் இருவரும் திருத்தங்கல்-செங்கமலநாட்சியார்புரம் சாலையில் வந்து கொண்டிருந்தனர்.
  அப்போது, ஜீப் எதிர்பாராதவிதமாக சாலையோரப் பள்ளத்தில் இறங்கி அங்கிருந்த மின்கம்பத்தின் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த நாகேந்திரன் மற்றும் அவரது தாய் லட்சுமி ஆகிய இருவரையும் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
  இந்த விபத்தில் மின்கம்பம் சாய்ந்ததால், மின்விநியோகம் நிறுத்தப்பட்டது.
  4 மணி நேரத்துக்குப் பின்னர், மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பத்தை சீரமைத்து மின்விநியோகிக்கப்பட்டது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai