சுடச்சுட

  

  மதுரை, விருதுநகர், குமரியில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.2 கோடி மோசடி செய்ததாக 3 பேர் கைது

  By DIN  |   Published on : 04th January 2017 06:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களில் நிதி நிறுவனம் நடத்தி, ரூ.2 கோடி மோசடி செய்ததாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
  கன்னியாகுமரியை சேர்ந்த சிலர் மதுரையை தலைமையிடமாகக் கொண்டு நிதி நிறுவனம் நடத்தி வந்தனர். இதன் கிளைகள் குமரி, விருதுநகர் மாவட்டங்களிலும் செயல்பட்டு வந்தன.
  இந்நிறுவனத்தில் முதலீடு செய்யும் பணத்தின் முதிர்வுக் காலத்தில் வீட்டுமனைகள், விவசாய நிலங்கள் முதலீடுதாரர்களுக்கு வழங்கப்படும்; பணத்திற்கு அதிக வட்டி தருவதுடன், தேவைப்படும் நேரத்தில் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டதாம்.
  இதை நம்பி ஏராளமானோர் நிதி நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தனராம். ஆனால், முதிர்வுக் காலம் வந்தும், முதலீடு செய்தோருக்கு பணம் திரும்ப வழங்கப்படவில்லையாம்.
  இதுகுறித்து, நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்த அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சீதாராமன் மனைவி மீனா (58) என்பவர் மதுரை புறநகர் போலீசில் புகார் செய்தார்.அதில், நிதி நிறுவன இயக்குநர்களான குமரி மாவட்டம், அகஸ்தீசுவரம் அருகேயுள்ள பத்ரகாளிவிளையைச் சேர்ந்த நல்லபெருமாள், அருவிக்கரை அருகேயுள்ள குழித்தராயன்விளையைச் சேர்ந்த ரகுராமன், நாகர்கோவில் ஆசாரிப்பள்ளத்தை சேர்ந்த கில்பர்ட் ஜேம்ஸ், மேல சங்கரன்குழியைச் சேர்ந்த வசந்தகுமாரி, பழவிளையைச் சேர்ந்த ஜெயசோபா, பத்மநாபபுரத்தைச் சேர்ந்த நடராஜன் ஆகிய 6 பேர் மீது புகார் செய்யப்பட்டது.
  இதைத்தொடர்ந்து, போலீஸார் நடத்திய விசாரணையில் மேற்கூறிய 6 பேரும் குமரி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் ரூ.2 கோடி வரை பலரிடம் பணம் வசூலித்து மோசடி செய்தது தெரியவந்ததாம்.
  இதையடுத்து, வழக்கானது மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றது. குற்றப்பிரிவு போலீஸார் அளித்த தகவலின்பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தர்மராஜன் உத்தரவுப்படி, குமரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு துணைக் கண்காணிப்பாளர் பால்துரை தலைமையிலான போலீஸார் நல்ல பெருமாள், ரகுராமன், கில்பர்ட் ஜேம்ஸ் ஆகியோரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
  தொடர்ந்து, 3 பேரும் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
  இதனிடையே, நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் தங்கள் அசல் ஆவணங்களுடன் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai