சுடச்சுட

  

  அடிப்படை சட்டத்தை மாணவர்கள் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம்: நீதிபதி

  By DIN  |   Published on : 05th January 2017 06:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கல்லூரி மாணவர்கள் அடிப்படை சட்டம் குறித்து தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம் என சிவகாசி சார்பு நீதிபதி எஸ்.ஹேமா தெரிவித்தார்.
   சிவகாசி வட்ட சட்டப் பணிக்குழு சார்பில் புதன்கிழமை சங்கரலிங்கம் புவனேஷ்வரி பார்மஸி கல்லூரியில் நடைபெற்ற சட்ட விழிப்புணர்வு முகாமுக்கு முதல்வர் பி.சோலைராஜ் தலைமை வகித்தார். இதில் சிறப்புரையாற்றி சார்பு நீதிபதி ஹேமா பேசியதாவது: ஊர்வலம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் நடத்த உரிமை
  உள்ளது. அனால் அது சட்டத்துக்குள்பட்டு, உரிய அனுமதி பெற்று நடக்க வேண்டும்.
  சாலைகளில் செல்லும் போது சட்ட விதிகளை மீறாமல் சென்றால் தான் நமக்கு பாதுகாப்பு. விதிகளை புறக்கணித்து விட்டு சாலையில் சென்றால் யாருக்கு நஷ்டம். நமக்குத் தான். வாழ்க்கையில் அடிப்படி சட்டங்கள் குறித்து மாணவர்கள் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். நீங்கள் இருசக்கர வாகனம் ஓட்டினால் உரிய உரிமம் எடுத்துக் கொள்ள வேண்டும். அது உங்களுக்கு பல வகைகளில் பாதுகாப்பைத் தரும் என்றார்.
  இதில் மாவட்ட உரிமையியல் நீதிபதி எஸ்.மனோஜ்குமார், குற்றவியல் நீதித்துறை நடுவர் எஸ்.சந்தனக்குமார் ஆகியோர் பேசினர் வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் ஜி.வைரமணி வாழ்த்திப் பேசினார். வழக்குரைஞர் சந்திரசேகரன் நன்றி கூறினார்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai