சுடச்சுட

  

  சிவகாசி அருகே விதிமுறை மீறி செயல்பட்ட பட்டாசு ஆலை உரிமம் தாற்காலிக நிறுத்தம்

  By DIN  |   Published on : 05th January 2017 06:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிவகாசி அருகே விதிமுறை மீறி செயல்பட்ட பட்டாசு ஆலையின் உரிமத்தை தாற்காலிகமாக நிறுத்தி வைத்து மாவட்ட வருவாய் அலுவலர் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
   நாரணாபுரம் புதூர் கிராமத்தில் நாக்பூர் உரிமம் பெற்ற பட்டாசு ஆலை கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் விதிமீறல்கள் நடைபெறுவதாக புகார் வந்ததையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமரன் அங்கு திடீர் ஆய்வு நடத்தினார்.
   அப்போது பட்டாசுகள், உலர்தளத்தில் காய வைக்கப்படாமல் மரத்தடியில் காய வைத்திருப்பதும் மணிமருந்து பாதுகாப்பில்லாமல் வைத்திருந்ததும், உற்பத்தி அறையில் அளவுக்கு அதிகமாக வெடிமருந்துகளுடன் கூடுதல் வேலையாள்கள் பணிபுரிவதும் கண்டறியப்பட்டது. அதே போல், உற்பத்தி செய்யப்பட்ட வெடிகளை சேமிப்பு கிடங்கில் வைக்காமல் தொழிற்சாலை வளாக அறையில் வைத்திருந்ததும், பட்டாசு தயாரிக்கும் அறைகளில் ரப்பர் சீட் விரிக்காததும், ராக்கெட் பெல்ட்டுகளை திறந்த வெளியில் காயவைத்ததும் தெரியவந்தது.
   இதையடுத்து, இத்தொழிற்சாலைக்கு வழங்கப்படும் சல்பர் உரிமத்தை தாற்காலிகமாக இடை நிறுத்தம் செய்து மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டார். இத்தொழிற்சாலையின் மீது உரிய மேல்நடவடிக்கை மேற்கொள்ள சிவகாசி துணை முதன்மை வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலருக்கும் அவர் பரிந்துரை செய்துள்ளார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai