சுடச்சுட

  

  வி.பி.எம்.எம். கல்வி நிறுவனத்தில் பாவை விழா ஜன.9-இல் தொடக்கம்

  By DIN  |   Published on : 05th January 2017 06:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் வி.பி.எம்.எம். கல்வி நிறுவன வளாகத்தில் 9 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை 19-ஆவது திருப்பாவை-திருவெம்பாவை விழா நடைபெறுகிறது.
  வி.பி.எம்.எம். கல்வி அறக்கட்டளையும், வி.பி.எம்.எம். கல்வி நிறுவனங்களும் இணைந்து நடத்தும் இவ்விழா குறித்து கல்வி நிறுவனங்களின் தலைவர் வி.பி.எம்.சங்கர், புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: விழா தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் 9 ஆம் தேதி காலை 9 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் சன்னதி முன்பு கல்லூரிகளின் மாணவிகள் கலந்து கொள்ளும் பாவை விழா பேரணியை தென்மண்டல காவல் துறைத் தலைவர் எஸ்.முருகன் தொடங்கி வைக்கிறார். பின்னர் 11.30 மணிக்கு தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. கல்வி நிறுவனங்களின் தாளாளர் பழனிச்செல்வி குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடக்கி வைக்கிறார். மாலையில்  ஓய்வு பெற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.கலியமூர்த்தி பெண் கல்வியும், பெண்ணின் பெருமையும் என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவாற்றுகிறார். இரவு தந்திக் கருவிகளின் நாத சங்கமம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
  10ஆம் தேதி காலை 10 மணிக்கு பக்தி நெறியிலும் சமூக வாழ்விலும் முத்திரை பதிப்பது ஆண்களா பெண்களா என்ற தலைப்பில் திண்டுக்கல் ஐ.லியோனி தலைமையில் பட்டிமன்றம் நடைபெறுகிறது. மாலை பாவை நோன்பில் உடல் நலம் மனவளம் என்ற தலைப்பில் சமூக ஆர்வலர் ஆர்.ஞானகுமார் உரையாற்றுகிறார். இரவு மதுரை ரிதம் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
  11 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு ராமானுஜர் அருளிய அருள்மொழி என்ற தலைப்பில் அரையர் வடபத்திர சாயி சுவாமிகள் சிறப்புரையாற்றுகிறார். காலை 10.30 மணிக்கு மகாநதி ஷோபனாவின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு சென்னை கலாசாதனாலயா, நாட்டிய கலா சிகாமணி ரேவதி ராமச்சந்திரன் குழுவினரின் கதம்பம் பரதநாட்டிய சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
   ஏற்பாடுகளை கல்வி நிறுவனங்களின் இணைத் தாளாளர் துர்காமீனலோசினி, துணைத் தலைவர் தங்கபிரபு ஆகியோர் தலைமையில் முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்கள் செய்து வருகின்றனர் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai