சுடச்சுட

  

  விருதுநகரில் மருத்துவ தாவரங்கள் சிறப்புக் கண்காட்சி

  By DIN  |   Published on : 05th January 2017 06:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விருதுநகர் அரசு அருங்காட்சியகம், மம்சாபுரம் சிவானந்த சித்த வைத்திய சாலை இணைந்து புதன்கிழமை மருத்துவ தாவரங்கள் குறித்த சிறப்பு கண்காட்சி மற்றும் கருத்தரங்கை நடத்தின.
   மருத்துவ தாவரங்கள் குறித்த கண்காட்சியை மருத்துவ அலுவலர் மணிமேகலை தொடங்கி வைத்தார். அதில், ஆடாதொடை, ஆடு தீண்டாமை, ஆவாரை, ஈசுவர மூலி, சிற்றத்தை, கரிசாலை, கீழாநெல்லி, சோற்று கற்றாழை, தண்ணீர்விட்டான் கிழங்கு, செம்பருத்தி, துளசி, நிலவேம்பு, முடக்கத்தான், வல்லாரை, திருநீற்றுபசலை, பொன்னாங்கன்னி, பிரண்டை, தூது வளை உள்ளிட்ட ஏராளமான தாவரங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இதை செந்திக்குமார நாடார் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டு தாவரங்கள் பற்றி கேட்டறிந்தனர். இதை தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்குக்கு சித்த மருத்துவ அலுவலர் மணிமேகலை தலைமை வகித்தார். நிகழ்ச்சியை அருங்காட்சியக காப்பாட்சியர் சே.கிருஷ்ணம்மாள் வரவேற்றார். இதில், சென்னை லயோலா கல்லூரி பூச்சியியல் ஆய்வு மைய ஆய்வாளர் பி. பாண்டிக்குமார், பிரம்ம கோவிந்தன் வைத்தியர் ஆகியோர் பேசினர். அதை தொடர்ந்து அம்பாள் முத்துமணி, உணவே மருந்து என்ற தலைப்பிலும், அருண் சின்னையா, பால்வினை நோய்கள் மற்றும் ஆண்மை குறைவு மருத்துவம் என்ற தலைப்பிலும், மருத்துவர் வே.கணபதி, விஞ்ஞான நோக்கில் நம்நாட்டு மூலிகைகள் என்ற தலைப்பிலும், வீரக்காமு ஆசான், டெங்கு சாய்ச்சலுக்கு சித்த மருத்துவம் என்ற தலைப்பிலும் பேசினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai