சுடச்சுட

  

  அருப்புக்கோட்டையில் ஸ்ரீகிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சார்பாக ஸ்ரீகிருஷ்ண, பலராமர் விக்கிரக ரத ஊர்வலம் நடைபெற்றது.
    இஸ்கான் அகில பாரத பாதயாத்திரைக் குழுவினர் கடந்த 34 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் துவாரகையில் தொடங்கி பாத யாத்திரையாக இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று ஸ்ரீகிருஷ்ண பக்தி மகிமை பற்றி சொற்பொழிவு ஆற்றி வருகின்றனர்.
   அருப்புக்கோட்டையில் இந்த பாதயாத்திரைக் குழு வந்துள்ளதை முன்னிட்டு ஸ்ரீகிருஷ்ண, ஸ்ரீபலராமர் விக்கிரகங்கள் கொண்ட சிறு ரத ஊர்வலம் நடத்த ஏற்பாடானது.
   இதன்படி புதன்கிழமை இரவு சொக்கலிங்கபுரம் ஸ்ரீமீனாட்சி சமேத ஸ்ரீசொக்கநாதர் ஆலய வளாகத்தில் ரத ஊர்வலம் தொடங்கி திருச்சுழி சாலை, பழைய பேருந்து நிலையம் வழியாக மீண்டும் சொக்கலிங்கபுரம்  சிவன் கோயிலில்  நிறைவடைந்தது.   அதன் பின்னர் இஸ்கான் அகில பாரத பாதயாத்திரைக் குழுவின் சார்பாக பிரார்த்தனைக்குத் தலைமை வகித்த அகிலதாரதாஸ் மற்றும் தயாபராயன் ஆகியோர் பகவத் கீதை பற்றி சிறப்பு சொற்பொழிவாற்றினர்.
   தொடர்ந்து ஸ்ரீகிருஷ்ணர் விக்கிரகத்திற்கு சிறப்பு ஆரத்தி, பூஜைகள் செய்து வழிபாடு நடைபெற்றது.
  திரளாகக் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.  அருப்புக்கோட்டை குழந்தைவேல்புரத்தில் செயல்பட்டுவரும் இஸ்கான் இயக்கக் கிளையின் நிர்வாகி வேணுதாரி கண்ணையா தாஸ் இதற்கான ஏற்பாடு செய்திருந்தார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai