சுடச்சுட

  

  ஆசிரியர் பற்றாக்குறை: ராஜபாளையம் அருகே மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் மறுப்பு

  By DIN  |   Published on : 06th January 2017 01:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராஜபாளையம் அருகே மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்களிடம் கல்விதுறை அதிகாரிகள் வியாழக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர்.

   ராஜபாளையம் அருகே அம்மையப்பபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கடந்த ஒரு வருடமாக அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படவில்லை.
   இதனால், அறிவியல் பாடத்தில் மாணவர்கள் பின்தங்குவதாகவும், ஆசிரியரை நியமனம் செய்யும் வரை மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் கூறி பள்ளியில் படிக்கும் 70 மாணவர்களையும் புதன்கிழமை பெற்றோர் பள்ளிக்கு அனுப்பவில்லை.
   இத்தகவல் தெரியவந்ததும் வியாழக்கிழமை விருதுநகர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் வேலம்மாள், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி ஆகியோர் பள்ளிக்குச் சென்று பெற்றோர்களிடம் பேசினர்.
   வெள்ளிக்கிழமை அறிவியல் ஆசிரியரை நியமிப்பதாக அவர்கள் உறுதி கூறியதைத் தொடர்ந்து பெற்றோர்கள் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பினர்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai